சிரிய எல்­லையில் ரஷ்ய இரா­ணுவ விமா­ன­மொன்றை துருக்­கிய போர் விமா­னங்கள் நேற்று சுட்டு வீழ்த்­தி­யதையடுத்து ரஷ்ய இரா­ணுவ விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தரைக்கு இறங்கி கொண்டிருந்த போது சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்ய இரா­ணுவ விமா­ன விமா­னத்தில் பய­ணித்த இரு விமா­னி­களும் தன்­னி­யக்க முறையில் விமா­னத்­தி­லி­ருந்து வெளித்­தள்­ளப்­பட்­டு பராசூட் மூலம் தரையிறங்கிய போதே இவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியை அண்மித்துள்ள சிரியாவில், நான்கு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா உட்பட பல நாடுகள் ராணுவ உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் அண்டை நாடான துருக்கியின் வான்வெளியில் பறந்த ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக, அந் நாட்டு வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் நாடான துருக்கியின் வான்வெளிக்குள், ரஷ்யாவின், ‘எஸ்யு-26’ ரக போர் விமானம் ஊடுருவியது.

அதாவது, ஐந்து நிமிடத்தில், 10 முறை ஊடுருவியது. இதுபற்றி பல முறை எச்சரித்தும் பலனில்லை. அதனால், வேறு வழியின்றி, ரஷ்ய போர் விமானத்தை, எங்கள் இராணுவம் சுட்டது.

அதிலிருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தப்பினர்; அவர்களில் ஒருவரை, சிரியா கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்துள்ளனர்.

சிரியா ஜனாதிபதி டொயீட் எர்டோரகனிடம், இதுபற்றி தலைமை தளபதி எடுத்துரைத்தார். நடந்த சம்பவம் பற்றி நேட்டோ மற்றும் ஐ.நா., சபை அதிகாரிகளிடமும், பிரதமர் அகமது டவ்டாகலு பேசியுள்ளார். இவ்வாறு துருக்கி ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யா மறுப்பு:

Video-shows-Syrian-rebels-allegedly-shoot-parachuting-Russian-pilots-out-of-the-sky-398105
இதற்கிடையில், ‘ரஷ்ய போர் விமானம் ஒன்று சிரியாவில் விழுந்துள்ளது. துருக்கி பகுதியில் இருந்து சுடப்பட்டதால் தான், விமானம் விழுந்துள்ளது.

ஆனால், தாக்குதல் நடந்த போது, சிரிய வான்வெளி பகுதியில் தான், ரஷ்ய விமானம் பறந்து கொண்டிருந்தது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும். இது சாதாரண விடயமல்ல’ என, ரஷ்ய இராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

GRAPHIC! Second video. Dead russian pilot of SU-24. Syria. 24/11/2015

புடீன் கண்டனம்:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன் கூறியதாவது:
துருக்கியின் இந்த செயல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயங்கரவாதிகளின் கூட்டாளிகள், எங்கள் முதுகில் குத்தியுள்ளனர். இதை, சாதாரணமாக ஏற்று கொள்ள முடியாது. இது பற்றி, முழுமையாக விசாரணை நடத்துவோம்.

சிரியா வான்வெளி பகுதியில் தான், ரஷ்ய விமானம் பறந்துள்ளது. துருக்கிக்கு ரஷ்ய விமானிகளோ, விமானமோ, எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. துருக்கியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி, சிரியா எல்லையில் தான், விமானம் விழுந்துள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு, துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. அதனால் தான், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்ய விமானத்தை, துருக்கி இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரியவந்து உள்ளது.

Syria – TOW against Russian rescue helicopter
The Russian bear has been provoked, the next few days will be interesting.

Share.
Leave A Reply