தெஹிவளை, கௌடான பிரதேசத்திலிருந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகளையும் சினைப்பர் கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர். எனினும் இது தொடர்பில், எந்தவொரு தகவலையும் அரசாங்கம் வெளியிடவில்லை என்று பொதுபலசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

கிருலப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘தெஹிவளை, கௌடான பிரதேசத்தில், முஸ்லிம் குழுவொன்று, பெரும்பான்மை இனத்தவரின் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டிருந்த போது, அங்கு தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகள் மற்றும் சினைப்பர் ஆகியவற்றை மீட்டிருந்தனர். மேலும், முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர்.

குறித்த இருவருக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம். ஆனால், இது குறித்த எந்தவித தகவலையையும் அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை’ என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை
25-11-2015

pillaiyanகொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத்துறை தலைமையகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாத காலம் விடுமுறை வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளித்துள்ளது.

இம்மாத அமர்வுக்காக பிரதித் தவிசாளர்; பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கிழக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமை (24) கூடியபோது, ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார்; (இனியபாரதி) இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தார்.

இந்தப் பிரேரணை தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) வழிமொழிந்ததுடன், அது மாகாணசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடுப்புக்காவல் விசாரணையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாதகால விடுமுறை அளிக்கவும் சபை அனுமதியளித்ததாக கே.புஸ்பகுமார்; (இனியபாரதி) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்;பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply