சிரியாவில் கிளர்ச்சிக் குழுவான ப்ரீ சிரியா ஆர்மி மற்றும் அல்நூஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சிரியா ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது.
ரஷ்யா விமானிகள் கதி?
இந்நிலையில் துருக்கி வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தை அந்நாட்டு ராணுவம் நேற்று சுட்டு வீழ்த்தியது. மேலும் அந்த விமானத்தை இயக்கிய பயணிகள் பாராசூட்டில் இருந்து குதித்த போது அவர்கள் மீதும் தரையில் இருந்து தாக்குதல் நடத்தியது துருக்கி. இதில் ஒரு விமானி உயிரிழந்ததாகவும் மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விமானிகளை தேடும் பணியில் 2 ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. இதில் ஒன்று இயந்திர கோளாறால் தரை இறக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த ஹெலிகாப்டரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருப்பது என்ன?
அந்த வீடியோவில், 2 ஹெலிகாப்டர்கள் வனப்பகுதி ஒன்றில் பறக்கின்றன… பின்னர் ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதி ஒருவர் அமெரிக்கா ராணுவம் பயன்படுத்தி வரும் டோவ் ஏவுகணை மூலமாக ஹெலிகாப்டரை இலக்கு வைத்து தாக்குவதில் இதில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யா விளக்கம்
இந்த ஹெலிகாப்டரை இயக்கியது ரஷ்யா ராணுவத்தினரா? சிரியா ராணுவத்தினரா என்பது தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்யா ராணுவ அதிகாரிகள், துருக்கி சுட்டு வீழ்த்திய விமானத்தில் இருந்த 2 விமானிகளைத் தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இதில் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒரு கடற்படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். எஞ்சியவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்யாவின் கடற்படை தளத்துக்கு திரும்பி வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
கருப்பின நபரை 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்க பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ