நடிகர் விஜய்யின் 59வது படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தாறு மாறு, வெற்றி என்றெல்லாம் ஆளாளுக்கு ஒரு தலைப்பைச் சூட்டிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக ‘தெறி’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
தெறி என்றால் தெறித்தல் என்று அர்த்தம். ‘தெறிச்சு ஓடணும்டா’ என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள். ஆனால் சமீப காலமாக சினிமாவல் ‘தெறி மாஸ்’ என குறிப்பிட்டு வருகின்றனர்.
அதாவது படம் பட்டையைக் கிளப்பும் விதத்தில் இருக்கிறது.. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அதற்கு அர்த்தம்.

ரஜினி படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவரது ரசிகர்கள்.. ‘தலைவா.. தெறி மாஸ்’ என்று முழங்குவதும், இணையதளங்களில் எழுதுவதும் வழக்கம்.
அஜீத் தனது வேதாளம் படத்தில் ‘தெறிக்க விடலாமா’ பல்லலைக் கடித்தபடி வசனம் பேசி இருப்பார். இதை வைத்து அஜீத்தின் பட விளம்பரங்களில் ‘தெறி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தனர்.