அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து மரணமடைந்த இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) தகனம் செய்யப்பட்டது.
இந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது.
மாணவனின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் வடக்கிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்று, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் உடல் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.