எந்தன் கண்களில்
கரையுமுந்தன் நினைவுகள்

 

காலம்தவறிய
தாவணிக்கனவுகள்

விடலைப்பருவத்தின்
விளக்கப்படாத ஸ்பரிசவாசம்

உன்னைத்தேடும்  பயணத்தில்
என்னைத்தொலைத்த  கானல்பாதை

கண்டுசொல்லி விட்டுப்போன
கார்மேக முகிற்கூட்டம்

நகர்கின்ற யாவும்  நின்றுபோனது
நகரா அனைத்தும் கண்ணில்மறைந்தது

காதலின் ராகம்மீட்டிய
வெண் பனித்தேசம்  நினைக்கிறேன்

வெறிச்சோடியது சாலைகள் மட்டுமல்ல
கோபுரங்களாய் நிமிர்ந்தெழுந்த என்கற்பனையும்தான்

அவள் அவனை மறந்தாள்
நான் அவளை  நினைத்தேன்

மின்சாரக்  கம்பியில் சிக்கிய
என்சிந்தனைச் சிதறல்கள்

ஒளிஏற்றியது
எனக்குள் இருந்த இருள்கிழிக்க

நடந்தேன் ஓடினேன்  நான்பார்த்த
அந்த முகம் கண்ணில்  படவேயில்லை

சலங்கை கட்டிய  மயிலாய்
குதித்தது மனசுகால்கள்  ஓயும்வரை

வலி(ரி)கள் பிறந்தது  புதுபரிமானத்தேடலாக
சாதகப் பறவை நானானேன் ..

 

இவன்.
சந்துரு .

Share.
Leave A Reply