த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று படத்துக்கு தலைப்பு வைத்தாலும், இரண்டு தாரகைகளும் ஒரு முறை கூட இணைந்து நடித்ததில்லை. ரசிகர்களின் இந்தக் குறையைத் தீர்த்து வைக்க வருகிறார்கள் இரு நடிகைகளும்.

எதிரும் புதிரும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்தார்கள் நயனும் த்ரிஷாவும். இவரது பாய் ப்ரண்டோடு அவரும், அவரது பாய் ப்ரண்டோடு இவரும் நெருங்கிப் பழகி சீண்டிக் கொண்டிருந்தார்கள்.

நெருங்கிய தோழிகள்
ஆனால் ஒரு மாலை நேர விருந்துக்குப் பிறகு நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் அப்படி புகழ்ந்து கொள்கிறார்கள்.
த்ரிஷா இல்லன்னா
நயன்தாரா த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தலைப்பு வைத்துவிட்டு அனுமதி கேட்டபோது, நயன்தாராவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் என்று சொன்னவர் த்ரிஷா (ரெண்டு பேர் பெயருக்கும் அந்தப் படம் பெருமை சேர்த்ததாங்கிறது வேற விஷயம்!.

லேடி சூப்பர் ஸ்டார்
நயன்தாரா தொடர்ந்து 3 வெற்றி படங்களில் நடித்து, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக உயர்ந்து இருக்கிறார். திரிஷா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் அதிரடி கதாநாயகியாக மாறியிருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன்
‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய நயன்தாராவின் மனம் கவர்ந்த விக்டர் என்கிற விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பார் என்று தெரிகிறது