பாரிஸில் உள்ள ஃப்ளவர் டவர் (Flower Tower) எனும் அடுக்குமாடிக் கட்டிடமானது பார்ப்பதற்கு ஒரு சிறு காடு போல தோற்றமளிக்கிறது.
10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் 380 மூங்கில் மரத் தொட்டிகள் வைக்கப்பட்டு அவை வளர்ந்து காணப்படுவதே காடு போல தோற்றமளிக்கக் காரணம்.
மழை நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குத் தானாகத் தண்ணீர் செல்லும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட மூங்கில் மரங்கள் பசுமை மாறாமல் காட்சியளிக்கின்றன.