பாடசாலை மாணவியொருவர் (15 வயது) தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று வெலிகம நகரில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த போதிலும் நேற்று (25) செவ்வாய்க்கிழமையே தெரிய வந்துள்ளது.

10ம் தரத்தில் கல்வி கற்கும் இம்மாணவி குறித்த தினம் வழமை போல் நித்திரைக்குச் சென்றுள்ளார். எனினும் காலையில் எழுந்து பார்த்த சமயம் இம்மாணவியைக் காணவில்லை.

தொடர்ந்து தேடுதல் நடத்திய போதே தனது காதலனுடன் சென்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

19 வயது காதலனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். வெலிகம பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

Share.
Leave A Reply