நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்ட இச்சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC0167720 வயதுடைய மோகன்ராஜ் பிரியந்தினி எனும் காசல்ரி தமிழ் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரிய வந்துள்ளது.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு வீட்டில் இருந்து காணமல் போனதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிசில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்திருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

DSC01680
இவரை தொடர்ந்து தேடிய பெற்றோர் தமது வீட்டின் அருகில் காண்ப்படும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஏதோ மிதப்பதை கண்டு சென்று பார்த்த பொழுது தமது பிள்ளை இறந்து நீரில்
மிதப்பதை கண்டுள்ளனர்.

DSC01682சடலம் வைத்திய பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

DSC01701காதல் விவகாரம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள நிலையில், நோட்டன் பிரிட்ஜ் பொலிசார் அவரது மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

DSC01704DSC01706DSC01709

Share.
Leave A Reply