இலங்கையரான பொலிவூட் நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸின் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது.
பொலி வூட்டின் முன்னிலை நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைப்பைவிட ஜக்குலின் பெர்னாண்டஸ் புகழ்பெற்றவராக விளங்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2006 அழகுராணியான ஜக்குலின் பெர்னாண்டஸ், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அமிதாப் பச்சனின் அலாடின் திரைப்படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக அறிமுகமானார்.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த சல்மான் கானின் கிக் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் அவர் மூலம் பெரும் புகழ்பெற்றார்.
படிப்படியாக அதிகரித்த ஜக்குலின் பெர்னாண்டஸின் புகழ், கத்ரினா கைப்பின் புகழை விஞ்சும் அளவுக்கு அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பொன்றில் மூலம் தெரியவந்துள்ளதாம்.
கத்ரினா கைப்பை தனது விளம்பரங்களில் தோன்ற வைத்த நிறுவனமொன்றினால் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களாக கத்ரினா கைப் அந்த நிறுவனத்துடன் தொடர்புபட்டிருந்தார். ஆனால், அந்நிறுவனம் தனது புதிய பிரசாரத்திட்டத்துக்கு புதியவர் ஒருவரை தேடியது.
இது தொடர்பான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஜக்குலின் பெர்னாண்டஸை அந்நிறுவனம் அணுகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரமொன்று கூறியதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஆனால், கத்ரினா கைப் விளம்பரப்படுத்திவந்த பொருளுக்காக அல்லது புதிய பொருளுக்காக ஜக்குலின் பெர்னாண்டஸின் ஆதரவை பெற அந்நிறுவனம் விரும்புகிறது என்பது குறித்தோ, ஜக்குலின் பெர்னாண்டஸ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ உறுதியாகத் தெரியவில்லை எனவும் அவ்வட்டாரம் தெரிவித்துள்ளது.
30 வயதான ஜக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் டிஸும், ஹவுஸ்புல் 3, ஏ பிளையிங் ஜாட் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Range-Rover-Evoque- வாகனத்தை கடந்த வாரம் மும்பையில் ஜக்குலின் பெர்னாண்டஸ் அறிமுகப்படுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.