டெல்லி: இந்தியாவில் கார்கில் போர், உள்நாட்டு போர், அரசியல் வாதிகள் போரெல்லாம் கூட ஓய்ந்துவிடும். ஆனால், முடிவே இல்லாத “அக்கப்போர்” என்றால் அது மாமியார் – மருமகள் சண்டைதான். இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் “அமைதிப்படை வீரர்”கள் நிலைமைதான் ரொம்ப பரிதாபம்.
வம்சாவளியாக தொடரும் இந்த சண்டைக்கு உச்சம் வைக்கும் வகையில் ஒரு கோவக்கார மருமகள், மாமியார் குலமே அதிரும் வகையிலான செயலைச் செய்துள்ளார்.

kural

அப்டியே காக்கா ஸாரி.. “குயில்” குரல்: ஒரு பண்டமாற்று இணையதளத்தில் தன்னுடைய மாமியாரின் புகைப்படத்தினை அப்லோட் செய்து “60 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மாமியார் விற்பனைக்கு. இனிமையான குரல், சுற்றுவட்டாரத்தில் யாரையும் இருக்க விடாத குரல்.

26-1448531522-3-foods

இக்கும்..உப்பே இல்லை சாப்பாட்டில்: அருமையான உணவு வல்லுனர், நீங்கள் என்ன சமைத்தாலும் நல்ல கமெண்ட் வரவே வராது. நல்ல ஆலோசகரும் கூட…எப்போதுமே நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய வேலை இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

26-1448531555-online-sale-600

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்: மேலும், இந்த விற்பனைப் பதிவினை “நல்ல நிலையில் உள்ள மாமியார் விற்பனைக்கு” என்று புத்தகத்திற்கு பதிலாக விற்பனை செய்யப்படும் மன அமைதிக்காக என்றும் தெரிவித்துள்ளார்.
26-1448531588-stress34

மன அழுத்தமே காரணம்: இந்த பதிவு 10 நிமிடங்களில் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், மண வாழ்க்கை சார்ந்த கோபங்கள் தற்போது இதுபோன்ற விற்பனை தளங்கள் வழியாக மன அழுத்தமாக வெளிப்படத் துவங்கியுள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

26-1448531627-online-sale-600

உடனடியாக நீக்கம்: மேற்படி விளம்பரம் வெளியாக இணையதளத்தின் துணை நிறுவனர், “இது போன்ற பதிவுகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. எனவே, உடனடியாக அதனை நீக்கி விட்டோம். எனினும், முதல் முறையாக இது போன்ற பதிவினைப் பார்க்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

26-1448531660-sale-onlinee-600

அதுக்கு இது பரவாயில்லை: கடந்த வருடம் இதே போன்று ஒரு விற்பனை இணையதளத்தில் கணவனின் புகைப்படத்தினைப் போட்டு மனைவி ஒருவர் “செல்லப் பிராணிகள்” விற்பனை வரிசையில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. “அத்தே.. நீ செத்தே”ன்னு இப்படிப் போட்டுட்டீங்களேம்மா..என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா! Show Thumbnail

Share.
Leave A Reply