தமிழ் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் இனியும் மௌனம் காப்­பது அர­சாங்­கத்தின் மீதான தமிழ் மக்­களின் நம்­பிக்­கையில் பாரிய விரி­சலை ஏற்­ப­டுத்தும். சமா­தான சூழலில் தமிழ் கைதி­களை தொடர்ந்தும் சிறை­பி­டித்து வைத்­தி­ருப்­பது அர்த்­த­மற்­றது என முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் ஜன­நா­ய­கக் ­கட்­சியின் தலை­வ­ரு­மான பீல்ட்­மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். புலம்­பெயர் அமைப்­பு­களின் தடை­நீக்கம் நாட்டை பாதிக்­கலாம். அர­சாங்கம் பாது­காப்பு

விட­யத்தில் அக்­க­றை­யுடன் செயற்­ப­ட­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தொடர்ந்தும் தடுப்­புக்­கா­வலில் வைத்­துள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கில் மக்கள் அழுத்தம் கொடுத்­து­வரும் நிலையில் அது தொடர்­பிலும் புலம்­பெயர் அமைப்­பு­களின் தடை­நீக்கம் நாட்டில் எவ்­வா­றான மற்­றதை ஏற்ப்­ப­டுத்தும் எனவும் வின­வி­ய­போதே சரத்­பொன்­சேகா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலத்தில் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்ட தமிழ் கைதி­களை விடு­விக்க வேண்டும் என்ற கருத்தை நான் முன்­னரே தெரி­வித்­துள்ளேன்.

யுத்­தத்தில் புலி­களை முற்­றாக அழிக்­க­வேண்டும் என்ற ஒரு நிலைப்­பாடு எம்­மிடம் இருந்­தது உண்­மையே. நாட்டை காப்­பாற்­றவும் மூவின மக்­களை அமை­தி­யாக வாழ­வி­டவும் அந்த காரி­யத்தை செய்­ய­வேண்­டிய பாரிய பொறுப்பு எமக்கு இருந்­தது.

ஆனால் இன்று உள்ள சூழலில் நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒன்று உரு­வா­கக்­கூ­டிய சூழ்­நிலை இல்லை என்றே நன் நினை­கின்றேன்.

யுத்த கால­கட்­டத்தில் பயங்­க­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தில் வடக்கில் பலரை கைது செய்தோம். அதேபோல் புலி­க­ளுடன் தொடர்­பு­டைய ஆயு­த­மேந்தி போரா­டிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நபர்­களை கைது­செய்தோம்.

இதில் உண்­மையில் புலிகள் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­டைய நபர்­களும் இருந்­தனர். அதேபோல் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­களும் இருந்­தனர்.

ஆனால் நேர­டி­யாக புலி­களில் இணைந்து செயற்­பட்ட 12ஆயிரம் நபர்கள் மஹிந்த அர­சாங்­கத்தில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­விக்கப்பட்­டனர். அவர்கள் சாதா­ராண சமூ­க­வா­தி­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

அவ்­வாறு இருக்­கையில் சந்­தே­கத்தின் பெயரில் கைது­செய்­யப்­பட்ட தமிழ் கைதி­களை இத்­த­னை­காலம் தடுத்து வைக்­க­வேண்­டிய அவசியம் எதுவும் இல்லை. அதேபோல் அவர்­களை விடு­விப்­பதால் நாட்டில் எந்­த­வித குழப்­பங்­களும் ஏற்­ப­டப்­போ­வதும் இல்லை.

மேலும் இந்த அர­சாங்­கத்தின் மீது தமிழ் மக்கள் நல்ல நம்­பிக்­கையை வைத்­துள்­ளனர். முன்­னைய அர­சாங்­கத்தின் மீது இருந்த வெறுப்போ, சந்­தே­கமோ இந்த ஆட்­சி­யா­ளர்கள் மீது இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

அவ்­வாறு இருக்­கையில் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்­தி­செய்யும் வகையில் அர­சாங்கம் நடந்­து­கொள்ள வேண்டும். இல்­லையேல் தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் மீது வைத்­துள்ள நம்­பிக்­கையில் விரி­சல்கள் ஏற்­படும்.

மேலும் புலம்­பெயர் அமைப்­பு­களை இலங்­கையில் அனு­ம­திக்­காது அவர்கள் மீதான தடை­களை வித்­தித்­தி­ருந்­தமை நாட்டின் பாது­காப்பை பலப்­ப­டுத்­தவே என்­பது உண்­மைதான்.

சர்­வ­தேச அமைப்­பு­களும் புலம்­பெயர் பயங்­க­ர­வாத அமைப்­பு­களும் இலங்­கையில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும் இப்போது புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. இது நாட்டை எந்தளவுக்கு பாதுகாக்கும் என்பது சந்தேகமே.

எனவே அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் எடுத்து தேசிய பாதுகாப்பு சீரழியாத முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

கைதிகளை உடன் விடுவிக்காவிடின் தமிழர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது: ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கூறுகின்றார்

jvp

அப்­பாவி தமிழ் கைதி­களை விடு­விக்க வலி­யு­றுத்தும் போது எதிர்ப்புக் குரல் எழுப்பும் தேசிய பற்­றா­ளர்கள் அன்று மஹிந்த புலி­களின் தலை­வர்­களை அர­வ­ணைத்­த­போது ஏன் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.

புலி­களின் தலை­வர்­க­ளுக்கு இரா­ணுவ பாது­காப்பு கொடுத்த­போது வாய்­மூடி இருந்­த­வர்கள் அப்­பாவி தமிழ் கைதி­களின் விடு­த­லை­யின்­போது சீறிப்­பாய்­கின்­றனர்.

தமிழ் அர­சியல் கைதி­களை உடன் விடு­விக்­கா­விடின் தமி­ழர்­களின் ஒத்­து­ழைப்பு முழு­மை­யாக எம்­மை­விட்டு போய்­விடும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் தற்­போது எழுந்­துள்ள சிக்கல் நிலை­மைகள் குறித்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை

வின­வி­ய­போதே அந்தக் கட்சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலங்­களில் இலங்­கையில் இடம்­பெற்ற மோச­மான செயற்­பா­டுகள், பிரி­வி­னைக்­கான அடித்­தளம் என்­பன மஹிந்த தரப்­பி­னரால் போடப்­பட்­டவையாகும்.

அதேபோல் யுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் நாட்டில் நடந்த அனைத்து மோச­டி­களின் பின்­ன­ணி­யிலும் மஹிந்த தரப்­பினர் செயற்­பட்­டனர்.

அவ்­வாறு இருக்­கையில் வடக்கில் புலி­களை சாட்டி நாட்டில் பாரிய இன­வாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டது உண்­மையே. அதை சிங்­கள அர­சியல் தலை­மைகள் மேற்­கொண்­டது என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­வேண்டும்.

அதேபோல் மிக­முக்­கி­ய­மாக விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் ஆயு­த­மேந்தி போரா­டிய கால­கட்­டத்­திலும் புலி­களின் முக்­கிய உறுப்பினர்களுடன் மஹிந்த குழு­வினர் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­தனர்.

அதற்­கான ஆதா­ரங்­களை அண்­மையில் அக்­கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­களே வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அதேபோல் யுத்தம் முடி­வுக்கு வந்­த­வுடன் புலி­களின் முக்­கிய நபர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு அவர்­களின் பணத்தையும் சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் உத­வி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு ஆட்சி நடத்­தி­யதும் மஹிந்த அணி­யினர் என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்த விட­யமே.

இன்றும் புலி­களின் முக்­கிய குற்­ற­வா­ளிகள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­ன­ர­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர். இவர்­கள்தான் ஆயுத கடத்தல், கொலை, நாட்டை பிரிக்கும் அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தனர்.

ஆனால் அவர்­க­ளுக்கு இரா­ணுவ பாது­காப்பும், அரச மரி­யா­தையும் கொடுக்­கின்­றனர். அது தொடர்பில் எவரும் விமர்­சிக்­க­வில்லை. ஆனால் ஆதராம் இல்­லாது சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்து தடுத்­து­வைத்­துள்ள அப்­பாவி தமிழ் கைதி­களை விடு­விக்க வலியுறுத்தினால் அதை எதிர்த்து வாதி­டு­கின்­றனர்.

இன்று அப்­பாவி தமிழ் கைதி­களை விடு­விக்க வலி­யு­றுத்தும் போது எதிர்ப்புக் குரல் எழுப்பும் நாட்­டுப்­பற்று வாதிகள் அன்று மஹிந்த புலிகளின் தலை­வர்­களை அர­வ­ணைத்­போது ஏன் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.

அன்று புலி­களின் முக்­கிய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக ஏன் நீதி­மன்­றத்தை நாட­வில்லை. இவர்­களின் செயற்­பா­டுகள் நாட்டை பாதுகாப்பதை விடவும் நாட்டில் இன­வா­தத்தை தோற்­று­விப்­பதாகத்தான் உள்­ளது.

ஆகவே இப்­போது நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­பட்­டி­ருக்கும் நல்­ல­தொரு தருணம். அர­சாங்­கமே அதை பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­வித்துள்ளது.

இப்போதாவது அநாவசியமாக தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை இப்போதாவது பூர்த்திசெய்ய வேண்டும்.

இப்போது தவறவிட்டால் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் நாட்டை கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பும் இல்லாமல் போய்விடும் என அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply