வெலிகம சுல்தானா கொட பிரதேச இளம் பெண்களின் மார்பை பலாத்காரமாக வருடுதல் போன்ற பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டமை தொடர்பில் 11 குற்றச்சாட்டுகள் தொடர்பாக இளைஞர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகம சுல்தானா கொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பெண்கள் தனியாக வீதிகளில் செல்லும் போது பலாத்காரமாக மார்பகங்களை பிடித்து பாலியல் குற்றங்களை செய்து வந்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த பிரச்சினை காணப்பட்ட போதும் தற்போதே குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.