இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில் ;

தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு. இதன்மூலம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும்.

தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித் தீர்மானத்தை வௌியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த நிலைப்பாடு என்ன என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply