கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி குமாரசேகர் வசந்தன் என்பவர் தனது மனைவிக்கு அடித்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை எதிரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து எதிரிக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.

மேற்படி நபர் தனது மனைவி தனக்கு தெரியாமல் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் எடுத்த காரணத்தினால் தனது மனைவியைப் பேசி தாக்கியதாக எதிரி மன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இதே வேளை தும்பளை, பருத்தித்துறை பகுதியில் சுப்பிரமணியம் நந்தகுமார் என்பவரிடமிருந்து 200,000 ரூபா பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது சம்பந்தமாக 11.02.2013 அன்று கைது செய்யப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்ட வைரமுத்து வரதன் என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணையின் பின் எதிரி குற்றவாளியாக காணப்பட்டதைத் தொடர்ந்து எதிரிக்கு ஐந்து வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடக்கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குறித்த 200,000ரூபா பணத்தையும் எதிரி முறைப்பாட்டாளரிடம் திருப்பிச் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply