மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி,  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில்,  வானிலை மாற்றத்தால் மணிக்கு 112 கி.மீ வேகத்தில் நேற்று பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக அங்கிருந்த பல வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது.

இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம், பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானில் வட்டமடிக்க செய்து பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

Share.
Leave A Reply