மஹியங்கணை – பதியதலாவ வீதியில் தெஹிகொல்ல பிரதேசத்திலுள்ள பஸ் தரிப்பிடத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து விபத்தின்போது காரில் வந்த சாரதி அங்கிருந்து ஓடியதாக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்தோர் தெரிவித்தனர்.
பாதையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், பஸ்தரிப்பிடத்தில் வேகமாக திம்பியதோடு, அதில் பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்த மூதாட்டிகள் இருவர் மீது மோதியுள்ளது.
இதனால், குறித்த மூதாட்டிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதோடு, ஒருவர் படு காயங்களுடன் மஹியங்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, மேலும் இருவர் இவ்விபத்திலிருந்து மயிரிழையில் தப்பித்துள்ளதோடு, அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரில் சிக்கிய படுகாயமடைந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
குறித்த சாரதி தப்பிச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.