ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட நிலையில் பாரிஸ் நக­ரத்தில் நடந்த தீவி­ர­வாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் ரஷ்­யாவும் பிரான்ஸும் ஒத்­து­ழைக்க முன்­வந்­துள்­ளது.

இதே­வேளை ரஷ்ய விமானம் ஒன்று துருக்­கியால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டுள்­ளது.

சிரிய உள்­நாட்டுப் போர் அடக்கு முறை ஆட்­சி­யா­ள­ருக்கு எதி­ரான கிளர்ச்­சி­யாக 2011 ஆம் ஆண்டு உரு­வா­னது.

அது ஷியா மற்றும் ஸுன்னி இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இடை­யி­லான மோதல்­க­ளாக மாறி­யது. பின்னர் அது ஈரா­னிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடை­யி­லான பிராந்­தியப் போட்­டி­யாக மாறி­யது.

இப்­போது அது நேட்டோப் படைத்­துறைக் கூட்­ட­மைப்­பிற்கும் ரஷ்­யா­விற்கும் இடை­யி­லான மோத­லாக மாறுமா என்ற அச்­சத்தை உருவாக்­கி­யுள்­ள­துடன் உல­கெங்கும் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்­களை இஸ்­லா­மிய அரசு செய்­யுமா என்ற அச்­சத்­தையும் உரு­வாக்­கி­யுள்­ளது.

வீழ்த்­தப்­பட்ட விமா­னங்கள்

Turkey-Plane_potd_3508262bபனிப்­போ­ருக்குப் பின்னர் ரஷ்ய விமா­ன­மொன்று நேட்டோ உறுப்பு நாடு ஒன்றால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது. இது 2015 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடந்­தது.

1960ஆம் ஆண்டு அமெ­ரிக்க யூ– 2 உளவு விமானம் ரஷ்­யாவின் சாம்–2 ஏவு­க­ணையால் வீழ்த்­தப்­பட்­டது. ஆயி­ரத்து தொளா­யி­ரத்து ஐம்பது­களில் நடந்த கொரியப் போரின் போது வான் பரப்பில் சோவியத் விமா­னங்­களும் அமெ­ரிக்க விமா­னங்­களும் அடிக்­கடி மோதிக் கொண்­டன.

ஒரு அமெ­ரிக்க விமானி சோவி­யத்தின் நான்கு மிக்–15 விமா­னங்­களை வானில் வைத்துச் சுட்டு வீழ்த்­தினார். சோவியத் ஒன்­றியம் ஆப்­கா­னிஸ்­தானை ஆக்­கி­ர­மித்­தி­ருந்த போது பாகிஸ்­தா­னியப் படை­யினர் அமெ­ரிக்கத் தயா­ரிப்பு F-–16 விமானங்­களில் சென்று குறைந்­தது பத்து சோவியத் போர் விமா­னங்­க­ளை­யா­வது 1980 களில் சுட்டு வீழ்த்­தினர்.

துருக்­கியால் தனது விமானம் சுடப்­படும் போது அது, ஒரு கிலோ­மீட்டர் துருக்கி சிரிய எல்­லைக்கு உட்­பக்­க­மாகப் பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா தெரி­வித்­தது.

2015 செப்­டம்­பரில் ரஷ்யா, சிரி­யாவில் தனது படை­யி­னரைக் கொண்­டுபோய் இறக்­கி­ய­தி­லி­ருந்து ரஷ்யப் போர் விமா­னங்கள் தனது வான் பரப்­புக்குள் பறப்­ப­தாக துருக்கி பல தடை­வைகள் ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருந்­தது.

2015 ஒக்­டோபர் மாதம் ரஷ்ய விமானம் துருக்­கி­யினுள் அத்துமீறியபோது, அடுத்த அத்­து­மீ­ற­லின்­போது சூடு விழும் என துருக்கி எச்சரித்தி­ருந்­தது. அதை நேட்டோ நாடு­களும் ஆமோ­தித்­தி­ருந்­தன.

thurukkiஇது துருக்­கியின் “ஏரியா”! ஏன் இங்கு ரஷ்யா?

ரஷ்ய விமா­னங்­களின் தாக்­கு­தல்­களால் சிரி­யா­வி­லுள்ள துருக்­கி­யர்­க­ளுக்கு ஏற்­படும் இழப்­புக்கள் துருக்­கி­யி­லுள்ள ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­க­ளாக வெளி­வ­ரு­கின்­றன.

சிரியா தொடர்­பான பேச்சு வார்­தைகள் வல்­ல­ரசு நாடு­க­ளி­டையும் மற்றும் பிராந்­திய நாடு­க­ளி­டையும் நடக்­கும்­போது அங்கு துருக்­கிக்கும் ஒரு இடம் உண்டு. இதை இனி ரஷ்யா ஆட்­சே­பிக்­கலாம். ஆனால் அது துருக்­கியின் பிராந்­திய ஆதிக்கக் கனவைப் பாதிக்கும்.

சுட்ட விமா­னமும் சுடப்­பட்ட விமா­னமும்.

துருக்கி சுட்டு வீழ்த்­திய ரஷ்­யாவின் எஸ்யூ-24 போர் விமா­னம் 23 மில்லி மீட்டர் துப்­பாக்­கிகள் மூன்று பொருத்­தப்­பட்­டவை. அத்­துடன் 20 கிலோ மீட்டர் தூரத்­தி­லுள்ள இலக்­கு­களைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழி­காட்டி ஏவு­க­ணை­க­ளையும் கொண்­டவை.

தேவை­யேற்­படின் தொலைக்­காட்சி வழி­காட்டி ஏவு­க­ணை­க­ளையும் எடுத்துச் செல்லக் கூடி­யவை. அதில் சிறந்த ரடார் வச­தி­களும் உண்டு.

இப்­ப­டிப்­பட்ட ரஷ்ய விமா­னத்தை அமெ­ரிக்கத் தயா­ரிப்­பான F–16 விமா­னத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்­தி­யுள்­ளது. விமா­னத்­தி­லி­ருந்து இரு விமா­னிகள் பர­சூட்டின் உத­வி­யுடன் தரை­யி­றங்க முற்­பட்ட வேளையில் துருக்­கிக்கு ஆத­ர­வான சிரியக் கிளர்ச்­சிக்­கா­ரர்கள் அவர்­களில் ஒரு­வரை ஜெனீவா உடன்­ப­டிக்­கைக்கு மாறாக சுட்டுக் கொன்­றனர்.

மற்­ற­வ­ருக்கு என்ன நடந்­தது என அறியச் சென்ற ரஷ்ய எம்ஐ – 17 உழங்கு வானூர்தி, சிரி­யாவில் உள்ள துருக்­கிப் படை­ய­ணியால் அமெ­ரிக்கா வழங்­கிய தாங்கி எதிர்ப்பு ஏவு­க­ணை­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.

jetsum1_3514484bRussia equips fighter jets in Syria with air-to-air missiles

குழம்­பிய சிரி­யாவில் மேலும் குழப்பம்

சிரிய ஆட்­சி­யா­ள­ருக்கு எதி­ராக பல அமைப்­புக்கள் போர்­பு­ரி­கின்­றன. சில போராளி அமைப்­பு­க­ளுக்கு ஐக்­கிய அமெ­ரிக்கா, துருக்கி, சவூதி அரே­பியா, கட்டார். ஐக்­கிய அமீ­ரகம் போன்ற நாடுகள் உதவி செய்­கின்­றன.

அல்­கை­தாவின் கிளை அமைப்­பான ஜபத் அல் நஸ்ரா, ஈரானின் ஆத­ரவு பெற்ற ஹிஸ்­புல்லா போன்ற அமைப்­பு­களும் சிரிய அரச படைகளுக்கு ஆதரவாகவும் அமெ­ரிக்க ஆத­ரவு பெற்ற அமைப்­புக்­க­ளுக்கு எதி­ரா­கவும் போரா­டு­கின்­றன.

குர்திஷ் மக்­களின் பெஷ்­மேர்கா அமைப்பும் தமது சுதந்­தி­ரத்­துக்­காகப் போரா­டு­கின்­றது. சிரி­யாவில் வாழும் துருக்­கி­யர்­களும் போராடு­கின்­றார்கள்.

இவர்கள் துருக்­கியை ஒட்­டிய சிரியப் பிர­தே­சத்தில் முப்­ப­திற்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் வாழ்­கின்­றார்கள். துருக்­கியர் படை­யணி என்ற படைக்­க­லன்கள் ஏந்­திய அமைப்பும் சிரிய அதிபர் அல் அஸாத்­திற்கு எதி­ராகப் போரா­டு­கின்­றது.

சிரி­யாவில் 22 இலட்­சத்­திற்கு மேற்­பட்ட துருக்­கி­யர்கள் வாழ்­கின்­றார்கள். கடந்த ஐம்­பது ஆண்­டு­க­ளாக குர்திஷ் மக்­களைப் போலவே பல துருக்­கி­யர்­களும் அர­புக்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர்.

அள­வோடு அடிக்கும் அமெ­ரிக்கா

துருக்­கியப் படை­யினர் ஐ.எஸ். அமைப்பின் மீது குண்­டுகள் வீசு­வ­திலும் பார்க்க ஈராக்கில் உள்ள குர்திஷ் போரா­ளிகள் மீது குண்டு வீசு­வதில் அதிக அக்­கறை காட்­டு­கின்­றனர்.

ஈராக்­கிலும் சிரி­யா­விலும் ஐ. எஸ். அமைப்­பி­னரை ஒழித்துக் கட்­டு­வது அங்கு வாழும் ஸுன்னி இன முஸ்­லிம்­களை அடி­மை­க­ளாக்கும் என துருக்கி, சவூதி அரே­பியா, ஐக்­கிய அமீ­ரகம், கட்டார் போன்ற நாடுகள் கரு­து­கின்­றன.

இதனால் ஐ.எஸ். அமைப்­பி­ன­ருக்கு எதி­ராக ஐக்­கிய அமெ­ரிக்கா கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளையே மேற்­கொள்­கின்­றது.

Islamic_State_(IS)_insurgents,_Anbar_Province,_Iraqஐ. எஸ்ஸை விட்டு அனைத்­திற்கும் அடிக்கும் ரஷ்யா?

ரஷ்யப் போர் விமா­னங்கள் ஐ. எஸ். அமைப்­பினர் மீது குண்டு வீசு­வ­திலும் பார்க்க அதிகளவு குண்டு வீச்­சுக்­களை அமெ­ரிக்க ஆத­ரவு அமைப்­புகள் மீதும் துருக்­கியர் படை­யணி மீதும் வீசு­கின்­றன.

இதனால் ஐ. எஸ். அமைப்­பி­ன­ரி­ட­மி­ருந்து குறிப்­பி­டத்­தக்க நிலப்­ப­ரப்பு எதையும் சிரிய அரச படை­யி­னரால் கைப்­பற்ற முடி­யாமல் இருக்கின்­றது.

துருக்­கியர் படை­யணி மீது ரஷ்ய விமா­னங்கள் வீசும் குண்­டு­களால் பல அப்­பா­விகள் கொல்­லப்­ப­டு­வ­தாகத் துருக்கி சொல்­கின்­றது. இது துருக்­கியின் பல குடி­மக்­களை ஆத்­தி­ர­ம­டைய வைத்­தது.

தான், படைக்­க­லன்­களும் பயிற்­சியும் வழங்­கிய படைக்­கு­ழுக்கள் மீது ரஷ்யா விமானத் தாக்­கு­தல்கள் நடத்­து­வது அமெ­ரிக்­கா­வையும் மாற்று வழியைத் தேட வைத்­தது.

மேற்­கா­சி­யாவில் ரஷ்ய ஆதிக்கம் மீண்டும் தலை­தூக்கும் நிலையில் ரஷ்­யா­விற்கு எதி­ராகக் காய்­களை நகர்த்த வேண்­டிய அவ­சியம் அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­பட்­டது.

அதற்கு முன்னர் சிரி­யாவில் தனது நேச நாட்டுப் படை­களைக் கள­மி­றக்­கு­வ­தற்கு ஒரு பன்­னாட்டு ஆணை தேவைப்­பட்­டது. அதற்கு பாரிஸ் நகரக் குண்டுத் தாக்­கு­தலை சாட்­டாக வைத்து ரஷ்­யாவின் ஆத­ர­வுடன் ஐக்­கிய நாடுகள் சபையின் பாது­காப்புச் சபையில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

துருக்கி, ரஷ்ய விமா­னத்தை வீழத்­திய பின்னர் அப்­படி ஒரு தீர்­மானம் கொண்டு வந்­தி­ருந்தால் ரஷ்யா அதற்கு ஆத­ரவு வழங்­காமல் இருந்­தி­ருக்கும்.

அமெ­ரிக்­காவின் முன்­கூட்­டிய அனு­ம­தி­யு­ட­னேயே துருக்கி ரஷ்ய விமா­னத்தின் மீது தாக்­குதல் நடத்­தி­யி­ருக்கும் என்­பது எவ­ராலும் ஊகிக்கக்கூடிய ஒன்றே.

ரஷ்யா தனது இரண்­டா­வது பெரிய வர்த்­தகப் பங்­கா­ளி­யான துருக்­கி­யுடன் மோதலில் ஈடு­ப­டு­வது அமெ­ரிக்­கா­விற்கு மேல­திக நன்­மை­யு­மாகும்.

துருக்­கிய அதிபர் ரிசெப் தயிப் எர்­டோகன் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ரஷ்­யா­விற்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது ரஷ்யா மேற்­கொள்­ள­வி­ருந்த சிரியத் தலை­யீடு பற்றி எதுவும் விள­டிமீர் புட்டின் தன்­னுடன் உரை­யா­ட­வில்லை என்­பதும் எர்­டோ­கனை கடும் விச­னத்­திற்கு உள்­ளாக்­கி­யி­ருந்­தது.

putin-erdogan_3514287cபுட்­டினின் ஈகோவில் அடி

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்­த­தி­லி­ருந்து ரஷ்யப் படை­யி­ன­ருடன் யாரும் சீண்ட மாட்­டார்கள் என்ற எண்ணம் விள­டிமீர் புட்­டி­னிடம் இருந்­தது. அவ­ரது அர­சு­ற­வி­ய­லா­ளர்கள் அடிக்­கடி ஒரு அணுப் படைக்­கலப் போர் வெடிக்கும் எனவும் மிரட்டிக் கொண்­டி­ருந்­தனர்.

அவர்­களில் ஒருவர், ஐக்­கிய அமெ­ரிக்­காவை கதி­ர்­வீச்­சுக்கள் நிறைந்த ஒரு சாம்பல் மேடாக்க ரஷ்­யாவால் முடியும் என்று கூடச் சவால் விட்­டி­ருந்தார்.

புட்­டீனின் இறு­மாப்­பிற்கு ஓர் அடி போடும் வாய்ப்­பிற்கு அமெ­ரிக்­காவும் அதன் நட்பு நாடு­களும் காத்­தி­ருந்­தன. குறைந்தளவு ரஷ்யப் படை­யி­னரைக் கொண்ட சிரியா அதற்கு உரிய இட­மாகத் தேர்ந்­தெ­டுக்கப் பட்­டி­ருக்­கலாம்.

துருக்­கியின் தாக்­கு­த­லுக்கு ரஷ்யா எந்­த­வித பதில் நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாத நிலையில் இருப்­ப­தாக பல மேற்கு நாட்டுப் படைத்­துறை நிபு­ணர்கள் கரு­து­கின்­றனர்.

துருக்­கியின் செய்கை ஒரு திட்­ட­மிட்ட ஆத்­தி­ர­மூட்டல் என்­கின்­றது ரஷ்யா. அத்­துடன் தவிர்க்க முடி­யாத விளை­வுகள் நிச்­சயம் தொடரும் என்­கின்­றது ரஷ்யா.

சீன அரச முத­லா­ளித்­து­வ­வா­தி­களின் ஊடகம், ரஷ்யா துருக்­கியின் ஒரு விமா­னத்தைச் சுட்டு வீழ்த்தும் என எதிர்வு கூறி­யுள்­ளது. துருக்கி, ஐ. எஸ். பயங்­க­ர­வா­தத்தின் ஆத­ர­வாளர் எனக் குற்றம் சாட்­டு­கின்­றது.

ஐ.எஸ். திருடும் எரி­பொ­ருள்­களை துருக்கி வாங்­கு­வ­தா­கவும் ஆரம்­பத்தில் இருந்தே ஐ.எஸ்­ஸிற்கு படைக்­க­லன்­களும் பணமும் வழங்­கு­வ­தா­கவும் ரஷ்யா குற்றம் சுமத்­து­கின்­றது.

ரஷ்­யா­விற்கு எதி­ரான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களா?

ஒரு புறம் துருக்கி ரஷ்ய விமா­னத்தைச் சுட்டு வீழ்த்த, மறு­புறம் உக்ரேன் தனது வான்­ப­ரப்பில் ரஷ்ய விமா­னங்கள் பறப்­பதைத் தடை செய்­த­துடன் ரஷ்­யாவில் இருந்து எரி­பொருள் வாங்­கு­வ­தையும் நிறுத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது. இவற்­றிற்கு மூன்று நாட்­களின் முன்னர் ரஷ்யா ஆக்­கி­ர­மித்­துள்ள கிரி­மியாப் பகு­திக்கு உக்ரேனிலிருந்து செல்லும் மின்பரிமாற்றிகள் குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன.

உலகமயமாகுமா ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்?

முப்­ப­தி­னா­யிரம் போரா­ளி­களைக் கொண்ட ஐ.எஸ். அமைப்பில் பதி­னை­யா­யிரம் பேர் வெளி­நாட்டுப் போரா­ளி­க­ளாகும். ஐ. எஸ். அமைப்பில் சதாம் ஹுசே­னின் ஆட்­சிக்­கா­லத்தில் இருந்த படைத் துறை நிபு­ணர்கள் இருக்­கின்­றார்கள். அதன் வசம் ஈராக்­கிலும் சிரியாவிலும் உள்ள எண்ணெய் வள­மிக்க பிர­தே­சங்கள் இருக்­கின்­றன.

ஈராக்கில் அது கைப்­பற்­றிய பிர­தே­சங்­களில் இருந்த ஈராக்­கிய அரச படை­யி­ன­ரிடமிருந்து கைப்­பற்­றிய பாரிய படைக்­க­லன்கள் இருக்கின்றன.

இவற்றை வைத்துக் கொண்டு ஈராக்­கிலோ அல்­லது சிரி­யா­விலோ ஒரு சிறு நிலப்­ப­ரப்­பை­யா­வது தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருக்க அதனால் முடியும்.

சிரி­யா­விலும் ஈராக்­கிலும் தன் மீது கடு­மை­யான தாக்­குதல் செய்­யப்­ப­டு­மி­டத்து, அதனால் தனது 15,000 வெளி­நாட்டுப் போரா­ளி­களை உலகின் எப்பாகத்திற்கும் அனுப்பி தீவிரவாதத் தாக்குதல்களைச் செய்ய முடியும்.

Share.
Leave A Reply