இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

141128182132_rajiv_gandhi_assasination_newspapers_vt_freeze_frame

ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்

அவரது கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை, தமிழக அரசு தன்னிச்சையாக விடுவிக்க முடியாது என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று திர்ப்பளித்தது.
141007154612_india_supreme_court_512x288_afp_nocredit

இந்திய உச்சநீதிமன்றம்

அவர்களை விடுவிப்பதா இல்லையா என முடிவு செய்யும் அதிகாரம், இந்திய மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பான சி பி ஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான இறுதி முடிவை மத்திய அரசே எடுக்க முடியும் என தலைமை நீதிபது தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

151202063924_nalini_murugan_624x351_ap
வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்

அதேபோல் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share.
Leave A Reply