யாழ்ப்­பாணம் வேலணைப் பகு­தியில் கடற்­ப­டை­யி­ன­ரது பஸ் வண்டி மோதி­யதில் வேலணை மேற்கு நட­ராஜ வித்­தி­யா­ல­யத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி உயி­ரி­ழந்­துள்ளார். விபத்தில் படு­கா­ய­ம­டைந்தநிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழி­யி­லேயே மாணவி உயி­ரி­ழந்­துள்ளார். நேற்றுக் காலை இடம்­பெற்ற இந்த வாகன விபத்தில் நாரந்­தனை

வடக்கு ஊர்­கா­வற்­று­றையைச் சேர்ந்த உசாந்தி உத­ய­குமார் (வயது 15) என்ற மாண­வியே உயி­ரி­ழந்­த­வ­ராவார். விபத்துச் சம்­ப­வத்தை அடுத்து பிர­தே­சத்தில் பதற்ற நிலை ஏற்­பட்­டது.

இதே­வேளை குறித்த விபத்தை ஏற்­ப­டுத்­திய பேருந்­தை­செ­லுத்­திய வாகன சார­தியை எதிர்­வரும் 17ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு -ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் சபேஷன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

விபத்துச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

மாணவி காலை ஏழு மணி­ய­ளவில் பாட­சா­லையில் இடம்­பெ­ற­வுள்ள ஒளி விழா நிகழ்­வுக்­காக துவிச்­சக்­க­ர­வண்­டியில் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு சென்­றுள்ளார். இவர் புளி­யங்­கூடல் சர­வணை சந்­திக்கு அரு­கா­மையில் சென்ற நிலையில் பின்னால் வந்த கடற்­ப­டை­யி­னரின் வாகனம் அவரை முந்திச் செல்­ல­முற்­பட்­டது. இதன்­போதே குறித்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் தலைப்­ப­கு­தியில் படு­கா­ய­ம­டைந்த மாண­வியை மோதிய கடற்­ப­டை­யி­னரின் வாக­னமே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டு சென்­றுள்­ளது. எனினும் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு வரும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

மாண­வியின் சடலம் பிரேத பரி­சோ­த­னை­களின் பின்னர் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விபத்து தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை தாம் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் தம்­மிடம் என்ன உதவி வேண்­டு­மா­னாலும் கோரு­மாறும் அதனை தாம் செய்து தரு­வ­தாக உறுதி மொழி வழங்­கி­ய­தாக உயி­ரி­ழந்த மாண­வியின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

உயி­ரி­ழந்த மாணவியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்களாவர். தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அவர்களது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் உறவினர் ஒருவரது வீட்டிலேயே தற்போது தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை
04-12-2015
946899786Murderயாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்காக தெஹியத்தகண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை
04-12-2015
suicide31வவுனியா, மஹகச்சிகொடிய, 83 வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதுடைய சிலாபம், குமாரஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply