‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா சீதையாக நடித்தார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் நயன்தாரா ராதையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா ஏற்கனவே வெங்கடேஷுடன் ‘லட்சுமி’, ‘துளசி’ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இப்போது அவருடன் 3–வது படத்தில் இணைகிறார்.

இந்த படத்தை மாருதி இயக்குகிறார். ஜிப்ராம் இசை அமைக்கிறார். வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம் ‘கோபால கோபாலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நயன்தாராவுடன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயார் ஆகிறது.

இது பக்திப் படம் அல்ல. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் ‘நந்தி விருது’ கிடைத்தது.

ராதையாக நடிக்கும் நயன்தாரா மீண்டும் விருது பெறுவாரா என்பது இந்த படம் வெளியான பிறகுதான் தெரியும்.

Sambanthan_Samantha-800x365

மாயாவைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா
04-12-2015

சென்னை: மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அதே போன்று ஒரு கதையில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த 2015 ம் வருடம் தமிழ்த் திரையுலகினருக்கு மோசமாக அமைந்த போதிலும் நயன்தாராவுக்கு நல்லதொரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் வரிசையாக வெற்றி பெற்றன.இதனால் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்து நயன்தாராவுக்கு கிடைத்தது.
நயன்தாரா ஜீவாவுடன் இணைந்து நடித்த திருநாள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு திகில் கலந்த காமெடிக் கதையில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
சற்குணத்தின் நீண்ட நாள் உதவியாளர் தாஸ் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். தாஸ் சொன்ன கதை நயன்தாராவிற்கு பிடித்துப் போனதால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகின்றனர்.

சற்குணம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாயா போன்று இந்தப் படமும் ஒரு திகில் கலந்த காமெடி கதைதானாம்!

nayantara_144301070920nayantara_144301070810nayantara_144301070800nayantara_144301070930nayantara_144301070940nayantara_144301070950nayantara_144301070960nayantara_144783779100nayantara_144783779250nayantara_144783779220nayantara_144783779230nayantara_144783779240

nayantara_144315751200nayantara_143746796600

Share.
Leave A Reply