றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனின் மரணம் கொலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய குழு நேற்று நீதிமன்றில் சமர்பித்த அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொஹமட் வசீம் தாஜூடீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹென்பிட்டி – சாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சிற்றூர்தி ஒன்றுக்குள் இருந்து எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இது விபத்து அல்லவெனவும், இது கொலையே எனவும் விசேட வைத்திய குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் கால்கள் , கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் என மருத்துவ குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வேளையில் தாஜூடீன் காரை செலுத்திக்கொண்டிருக்கவில்லையெனவும் , தாக்குதலுக்கு பின்னரே அவர் சாரதியின் ஆசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவரது உடலானது மரணத்தின் பின்னர் அல்லது உயிரிழக்க சிறிது நிமிடங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.