எல்பிட்டிய , ஊருகஸ்சந்தி – ரன்தொட்டுவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரன்தொட்டுவில பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளார்.
குறித்த நபர் 39 வயதான மணல் வியாபாரி என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் இனங்காணப்படவில்லை.
குறித்த பிரதேசத்தில் இரு பிரிவினருக்கிடையில் நீண்ட நாட்களாக நிலவும் முறுகல் நிலையே இக்கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் தலையற்ற உடல் ஒரு இடத்திலும் , தலை மற்றுமொரு இட த்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் வைத்தே கடந்த மாதம் இரு இளைஞர்கள் சுட்டிக்கொல்லப்பட்டிருந்தனர்.