ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனுக்கு இடையில் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
இதன்போது பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருவரும் விவாதித்தனர்.
இதற்காகதானா இவர்களை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள்?? நீ இப்படி செய்தாய், நான் இப்படி செய்தேன் என குழந்தைப் பிள்ளைகள் கூட இப்படி சண்டை பிடிக்காது.
சண்டைக்களத்தில் போட்டியில் உள்ள சண்டைகோழிகளின் விபரங்கள் இதோ
விக்கினேஸ்வரன்- சுமந்தரன்
சிறிதரன்- டக்ளஸ் தேவானந்தா
விஜயகலா -டக்ளஸ் தேவானந்தா
சுரேஸ் பிரேமச்சத்திரன்- சப்பந்தன், சுமந்தின்
அனந்தி -சம்மந்தன்,மாவை மற்றும் சுமந்திரனோடு மோதுகிறார்.
மாவை -விக்கினேஸ்வரன்
ரணில்- விக்கினேஸ்வரன்
அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டது – சி.வி.விக்னேஷ்வரன்
06-12-2016
அரசியலானது தன்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டதாகவும் எதையும் ஆர அமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய அவகாசத்தை தன்னிடமிருந்து பறித்தெடுத்து விட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
உலக மண் தினத்தை முன்னிட்டு வட மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.