லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாகக் கருதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு லண்டனில் பெருமளவுக்கு ஆட்கள் வந்து செல்லும் லேட்டன்ஸ்டோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை இச்சமவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை நடத்திய நபர் “இது சிரியாவுக்காக” எனக் கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் இத்தாக்குதலை நடத்திய நபரை செயலிழக்கச் செய்யும் வகையில் குறைந்த சக்தி மின்சாரத்தை துப்பாக்கி மூலம் செலுத்தி, அவரை கைது செய்தனர்.

நேற்று மாலை 7 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஒரு நபர் தீவிரக் காயங்களுக்கு உள்ளானார். சுமார் 7.5 சென்றி மீற்றர் நீளமான கத்தி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு கத்திக் குத்துக்கு இலக்கானவர மீது 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து நிலைமையை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கத்திக்குத்து நடைபெற்ற இடத்தில் பெரிய அளவில் ரத்தம் உறைந்து கிடந்ததையும் வீடியோ காட்சிகள் காட்டின.

தீவிரவாத அச்சுற்றுத்தல் மிகவும் உச்சநிலையில் உள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply