ஷரி ஆ சட்டத்தை ஆதரிக்கும் ரிஷாத் பதியூதின், மரிக்கார் எம்.பி நவவி, இஷாக் ரஹ்மான் ஆகியோரின் பார்வைக்கு இக்காணொளியை சமர்ப்பிக்கிறோம்.
காட்டுமிராண்டிக் கூட்டங்கள் இதை மட்டுமல்ல கழுத்தை கத்தியால் அறுப்பதையும் ஆதரிக்தான் போகின்றன. இக் காட்டு மிராண்டிதனங்களை ஆதரிக்கும் மனிதர்களுக்கு பொதுவெளியில் வைத்து கல்லெறிந்து இதே போன்று கொல்லவேண்டும்.
சவூதியில் இலங்கைப் பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்; சபையில் முஸ்லிம் எம்.பி.க்கள் சுமந்திரனுடன் கடும் சர்ச்சை
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை ஷரி ஆ சட்டத்தின் பிரகாரம் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில்
சுமந்திரன் எம்.பி.யின் இச்செயற்பாட்டுக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன், உறுப்பினர்களான நவவி, மரிக்கார் மற்றும் இஷாக் ஆகியோர் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின்போது இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவாதத்தில் பேசிக் கொண்டிருந்த சுமந்திரன் எம்.பி,
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சவூதியில் கல்லால் எரிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதற்காக தனது கவலையை வெளியிடுவதாகவும் கூறினார்.
சுமந்திரன் எம்.பி. குறிப்பிடுகையில்
இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நான் எதிரானவன் அல்ல என்பதால் நான் கூறுகின்ற கருத்துக்கள் இஸ்லாத்துக்கோ அல்லது அதனைப் பின்பற்றுவோருக்கோ எதிரானதாக இருக்காது.
இலங்கைப் பெண் ஒருவரைக் கல்லால் எரிந்து மரண தண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது போன்றதொரு தண்டனை 2013 இலும் நிறைவேற்றப்பட்டது. ரிசானா என்ற யுவதியும் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
இவ்வாறு பழமைவாத சட்டங்களே பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாகரீக சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நான் கிறிஸ்தவ மதத்ததைப் பின்பற்றுபவன், அதிலும் கல்லால் எரிந்து மரண தண்டனை நிறைவேற்றும் முறைமை இருந்தது.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இயேசுநாதரிடம் அழைத்து வந்தார்கள். அவரை கல்லால் எரிந்து கொல்லவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன்போது இயேசுதூதர் கூறியது என்னவெனில் உங்களில் பாவம் செய்யாதவர்கள் எவரோ அவரே இந்தப் பெண்மீது முதல் கல்லை எரியட்டும் என்று கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில் கற்களுடன் வந்தவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வேதாகமத்தில் கூறப்படுகிறது என்றார்.
இதன்போது சுமந்திரன் எம்.பி. ஷரி ஆ சட்டம் என்று தொடங்கி ஏதோ கூறமுற்பட்டபோது மரிக்கார் எம்.பி. கூச்சலிட்டார். அவருடன் இணைந்து கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியூதின் மற்றும் எம்.பி.க்களான நவவி மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரும் கூச்சலிட்டனர். அத்துடன் இஸ்லாத்தின் சட்டத்தை சுமந்திரன் விமர்சிப்பதாக சுமந்திரன் எம்.பி.க்கு எதிர்ப்பை வெ ளியிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தலையீடு செய்த சபாநாயகர் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று முஸ்லிம் உறுப்பினர்களைக் கேட்டுக்கொணடார். எனினும் அதற்கு செவிமடுக்கப்படவில்லை.
மரிக்கார் எம்.பி. தொடர்ந்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தமையால் சபாநாயகர் அவருக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தார். ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு உங்களுக்கு மூன்று தடவைகளுக்குமேல் கூறிவிட்டேன் என்று சத்தமாக கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி, நான் இஸ்லாத்துக்கோ அல்லது இஸ்லாமியர்களுக்கோ எதிராக எதனையும் கூறவில்லை. நான் முஸ்லிம்களுக்கா குரல் கொடுத்தமைக்காக பாரிய விமர்சனமும் என்மீது வைக்கப்பட்டது என்றார். எனினும் ரிஷாத் பதியூதின் சுமந்திரன் எம்.பி.மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதேவேளை சபைமுதல்வர், லக்ஸ்மன் கிரியெல்ல அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் அஜித்த பி.பெரேரா ஆகியோர் சுமந்திரன் எம்.பி. உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறு சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர்.
எனினும் உறுப்பினர்கள் மூவரும் தொடர்ந்தும் கூச்சலிட்டு இடையூறு விளைவித்தமையடுத்து சபாநாயகர் கருஜயசூரிய கடும்தொணியில் இடையூறுகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.