மஹியங்கனை பகுதியில் 18 வயதான ரம்யா விதர்சனி என்ற யுவதியொருவர் அண்மையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இதன் சந்தேகநபரான இளைஞனொருவர் மற்றும் அவரது 15 வயதான மனைவி ஆகியோர் காட்டுப்பகுதியொன்றில் விசமருந்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பின்னர் அவ்விளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கொலை தொடர்பில் வாக்குமூலமளித்துள்ளார்.
இதில் அவ் யுவதியை இரு நாட்களாக பிரதேசத்தில் கண்டதாகவும் இதனையடுத்து அவர் மீது ஆசை வந்த தாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருநாள் அப்பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் அவரின் பின்னால் சென்று வாயைப் பொத்தியுள்ளார். இதனையடுத்து அப்பெண் மயக்கமடைந்ததுடன் அவரைக் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னரே அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் தப்பித்துள்ளார். எனினும் பிரதேசவாசிகள் சூழ்ந்து கொண்ட தை அறிந்துகொண்ட அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் தனது மனைவிக்கும் விஷத்தை குடிக் க க் கொடுத்துள்ளார்.