உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை இன்று வரையிலும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் பின்பற்றி வருகிறார்கள். இதன் பின்னணியில் ஜாதி, மதம், இனம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இது போன்ற வினோத சடங்குகள் அமேசான் காடுகளில் தான் நடக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். படித்த மக்கள், மற்றும் அறிவார்ந்த இடங்களிலும் கூட இந்த சடங்குகள் இன்றளவும் உலகம் முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து சடங்குகளுக்கும் ஓர் காரணம், அதன் பின்னணியில் ஓர் வரலாறு புதைந்து இருக்கின்றன……
எல் கொலாச்சோ (El Colacho)
ஐரோப்பியாவில் பின்பற்றப்படும் இந்த சடங்கின் பெயர் எல் சால்டோ டெல் கொலாச்சோ. இதற்கு குழந்தையை தாண்டுதல் என்று பொருள். பிறந்து 12 மாதம் ஆவதற்குள், ஓர் பாயில் குழந்தையை படுக்க வைத்து, பேய் வேடமிட்ட நபர்கள் தாண்டி குதித்து செல்வர்கள்.

காரணம்
இதன் மூலம், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடு மற்றும் கெட்ட சக்தி அண்டாது என்று ஸ்பெயின் பகுதியில் உள்ள டே முர்சியா எனும் கிராமத்தினர் நம்புகிறார்கள்.

முஹர்ரம் (ஷியா முஸ்லிம்)
ஷியா முஸ்லிம் பிரிவினர்கள் தீர்க்கதரிசி முஹம்மதின் பேரன் இறந்ததன் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில், பத்து நாட்கள் சடங்குகள் பின்பற்றுகிறார்கள். அதில், பத்தாவது நாள் “Matam” எனும் சடங்கு பின்பற்ற படுகிறது. இந்த Matam எனும் சடங்கின் போது மக்கள் கத்தியைக் கொண்டு தங்கள் தலையில் தாங்களே தாக்கிக் கொள்ளும் சடங்கு பின்பற்றப்படுகிறது.

குழந்தையை தூக்கி எறிதல்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சடங்கு ஓர் கோவிலில் பின்பற்ற படுகிறது. இந்த சடங்கின் போது குழந்தையை 15 மீட்டர் உயரம் கொண்ட கோவிலில் இருந்து குழந்தையை தூக்கி கீழே எறிவார்கள்.
இதனால் அந்த குழந்தையின் அறிவு, தைரியம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் பெறும் என்று நம்புகிறார்கள். கீழே உள்ள நபர்கள் நீண்ட பெட்ஷீட் விரித்து வைத்து குழந்தையை பிடித்துக் கொள்வார்கள்.

புதைப்பது
புத்த மத துறவிகள் மத்தியில் இந்த சடங்கு இன்றளவும் பின்பற்ற வருகிறது என்று கூறப்படுகிறது. இறந்த நபரின் உடலை, உயிரிடம் இருந்து முழுமையாக பிரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சடங்கின் பெயர் Jhator. இந்த சடங்கின் போது இறந்த நபரின் உடலை மலை உச்சியின் வெளி இடத்தில் உடலை கழுகுகளுக்கு இரையாக வைத்துவிடுகிறார்கள். சில சமயங்களில் துறவிகளே அந்த உடலை உரித்து, பிரித்து வைத்துவிடுகிறார்கள்.

இறப்பு சடங்குகள்
அமேசான் காடுகளில் வாழும் யநோமாமி எனும் மலைவாழ் மக்கள் இறந்த நபர்களின் உடலையும், உயிரையும் முழுதாய் பிரிக்கும் முறை என்ற பெயரிலும், அவர்கள் தங்களுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தகனம் செய்த உடலை, நொதிக்கச் செய்த வாழைப்பழத்தில் கலந்து சாப்பிட்டுவிடுகிறார்கள்.
காரணம் இதன் மூலம் இறந்த நபர்கள் தங்களுடனே வாழ்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.