பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

 இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

bogavanthalava_girl_001தனது வீட்டிலேயே குறித்த சிறுமி   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

bogavanthalava_girl_002சிறுமி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply