லிபோர்னியா பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. முக்கிய அறிவிப்புகள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை அனைத்தையும் பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளும் மார்க் தனக்கு குழந்தை பிறந்த செய்தியையும் பேஸ்புக் மூலமாக பகிர்ந்துக்கொண்டார்.
மார்க் – பிரிசில்லா தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு மேக்ஸிமா என்று பெயர் வைத்துள்ளனர்.
குழந்தையின் அருகில் படுத்துக்கொண்டு லேசாக புன்முறுவல் செய்தபடி இருக்கும் மார்க்கின் படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.