சென்னை: நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது.இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார்.
அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும்.
ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார். அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவியுள்ளது.
ஜிம்மில் அவர் சிக்கென்ற இடுப்பைக் காட்டிக் கொண்டு கொடுத்த போஸ் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.