வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடிவரும் குர்டிஷ் இன போராளிகளின் தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு குர்டிஷ்  பெண்கள்  என்றால் மிகவும் பயமாம்.

வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஓட ஓட விரட்டிவரும் குர்டிஷ் மக்கள் பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவில் சுமார் 10,000 தொண்டர் போராளிகள் இருக்கின்றனர்.

வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து பல இடங்களையும் விடுவிப்பதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது.

இந்த படைப்பிரிவில் உள்ள 21 வயது டேல்ஹேல்தேன் என்ற பெண் போராளி சி. என். என் ஊடகத்துக்கு வழங்கிய தகவலின் படி ” ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தாங்கள் இஸ்லாத்தின் பெயரில் சண்டையிடுவதாக நம்புகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எவராவது குர்டிஷ் இன பெண்களால் கொல்லப்பட்டால் சொர்க்கத்துக்கு தங்களால் செல்ல முடியாது என்று நம்புகின்றனர்” என்று கூறுகிறார். இதனால் தான் அவர்களுக்கு (குர்டிஷ்) பெண்கள் என்றால் மிகவும் பயம்.

11665268185_848f03648b_o

டேல்ஹேல்தேன் என்றால் குர்டிஷ் இல் பழிவாங்குதல் என்று அர்த்தம். வட சிரியாவின் அல் ஹஷாஹ் மாகாணத்தின் ஒரு முன்ணனி சண்டை அரங்கில் டேல்ஹேல்தேன் பணியாற்றுகிறார்.

‘ஐ. எஸ். ஐ. எஸ் இங்கு வந்தால் அவர்களில் ஒருவரைத் தன்னும் உயிருடன் விடமாட்டோம் ‘என்கிறார் அங்கு பணியாற்றும் 20 வயதுடைய எப்லின் என்ற பெண்.

ஐ. எஸ்.ஐ. எஸ் பிடியில் உள்ள ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளில் பெண்கள் தமது 9 வயதில் திருமணம் செய்யலாம். ஏனைய சிறுபான்மையின மதங்களை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஜிஹாடி இன பெண்கள் பிடிக்கப்பட்டு பாலியல் அடிமை சந்தைகளில் விற்கப்படுகிறார்கள்.

அங்கு ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் அந்த பெண்களை பணம் கொடுத்து வாங்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி தமது அடிமைகளாக வைத்திருக்கலாம்.

அதேவேளை முஸ்லிம் பெண்கள் மனைவி, தாய் போன்ற வகிபாகத்தை மட்டுமே சமூகத்தில் வகிக்க முடியும் என்பது ஐ. எஸ். எ. எஸ் இன் தத்துவம்.

அவர்கள் எந்த அடிப்படையிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்றும் 15 வயதுக்கு பின்னர் படிக்கக் கூடாது என்றும் சட்டம் போட்டிருக்கிறார்கள்.

கணவன் மார் தொழில் நிமித்தம் அல்லது யுத்தத்துக்கு சென்றால் அவர்கள் வரும்வரை பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. தமது கணவனுடன் மட்டுமே உரிய பர்தா உடை அணிந்து அவர்கள் வெளியே செல்லலாம்.

YPI-2

கடந்த ஜூன் மாதம் வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து ஒரு நகரத்தை மீளவும் கைப்பற்றிய குதூகலத்தில் தமது கொடியை ஏந்தியபடி ஓடிவரும் குர்டிஷ் போராளிகள்.

பார்க்க வேண்டிய காணொளி

FULL 60 Minutes: Kurdish Female Fighters against ISIS – FEMALE STATE PART 2 (un-aired footage)

Share.
Leave A Reply