யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன், ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திரக் கட்சி யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த நியமனக்கடிதம் இருவருக்கும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து இவர்கள் இருவரும் இணைத்தலைவர்களாகச் செயற்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், வடபகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக தமது உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply