திருச்சி: திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்கள் இரண்டு பேரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர்களை காலால் உதைக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒழுங்காக படிக்காத மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அவர் இரண்டு மாணவர்களை பார்த்து படிப்பியா, படிப்பியா என்று கேட்டு அவர்களை கயிறால் அடிக்கிறார்.

பின்னர் அவர்கள் இருவரையும் ஒருவரின் காதை மற்றொருவரை பிடிக்கச் செய்து தோப்புக்கரணம் போட வைக்கிறார். திடீர் என்று மாணவர்களின் முடியை பிடித்து இழுத்து அவர்களை தரையில் தள்ளி காலால் எட்டி உதைக்கிறார்.
படிக்காத மாணவர்களை கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஆசிரியர் செய்த சித்ரவதையை அந்த வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் நைசாக தங்களின்.

செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒழுங்காக படிக்காவிட்டால் இப்படியா செய்வது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply