அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த இரண்டு பொலிசார் நேற்று காலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, Long Beach Boulevard பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டுருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே Nicholas Robertson(28) என்ற பெயருடைய நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

நபரிடம் துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. பொலிசாருக்கு எதிர்புறமாக நடந்து சென்றுக்கொண்டுருந்த நபரிடம் ‘துப்பாக்கியை கீழே போடுமாறு’ பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், பொலிசாரின் உத்தரவை மதிக்காமல் வாலிபர் அங்கிருந்து விலகி செல்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொலிசார் இரண்டு பேரும், நபரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

குண்டடிப்பட்ட அந்த நபர் தரையில் விழுந்து நகர்ந்தபோதும் பொலிசார் சுடுவதை நிறுத்தவில்லை. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

நபரின் உடல் கிடந்த இடத்தில் துப்பாக்கி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிசார் துப்பாக்கியால் சுடுவதை அருகே உள்ள வீட்டிலிருந்து நபர் ஒருவர் இந்த காட்சியை தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது, துப்பாக்கி வைத்திருந்த நபர் தங்களை சுட முயன்றதால, பாதுகாப்பு காரணமாக தான் சுட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், வீடியோவில் பதிவான காட்சியில் உயிரிழந்த நபர் பொலிசாரை விட்டு விலகி செல்வதாக அமைந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் குடியேயுள்ள நபர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Share.
Leave A Reply