நாட்டில் பயங்கரவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேச்சு எடுக்கும் போது, இதற்கு காரணமாக இஸ்லாமியர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்து பேசுவோம்.
ஆனால் அப்படி நீங்கள் நினைப்பவராயின் முதலில் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் மதம் என்பது மக்களைப் பிரிக்கும் ஒன்று. அந்த மதம் என்ற ஒன்று இல்லாவிட்டால் அனைவரும் மனிதர்கள். மதம் என்பது மக்கள் முறையான வழியில் நடக்க ஒருசில விதிமுறைகளைக் கொண்டதே தவிர, மற்றபடி அனைத்து மதங்களும் ஒரே குறிக்கோளைத் தான் கொண்டிருக்கும்.
இதை ஒவ்வொரு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் பற்றி தவறாக நினைப்பதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இந்தியாவில் இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் இஸ்லாமியர்கள் தான் உள்ளார்கள். இங்கு உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
09-1449645548-1-islam

இரண்டாவது பெரிய மதம்
இந்தியாவில் 172 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டு 14.2% மக்கள் தொகையுடன் இஸ்லாமிய மதம் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

09-1449645553-2-islam
இந்தியாவில் தான் அதிகம்
உலகிலேயே மத்திய கிழக்கு முழுவதையும் எடுத்துக் கொண்டால், உண்மையிலேயே இந்தியாவில் தான் நிறைய இஸ்லாமியர்கள் உள்ளனர்.
09-1449645559-3-allah

காஷ்மீர்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தான் பெரும்பாலான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். 110 சிறுபான்மை குவிப்பு மாவட்டங்களில், குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பங்கினர் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
09-1449645567-4-islam

அதிக கருத்தரிப்பு விகிதம்
இந்தியாவிலேயே கருத்தரிப்பு விகிதத்தில் மற்ற மதங்களை விட, இஸ்லாமியர்களின் கருத்தரிப்பு விகிதம் தான் மிகவும் அதிகம். கருத்தரிப்பு விகிதத்தில் ஏற்பட்ட உயர்வினால், இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு 10 சதவீதத்தில் இருந்து, 2013 இல் 14.4 சதவீதமாக இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகரித்துள்ளனர்.

09-1449645572-5-apjabdulkalam

தலைச்சிறந்த தலைவர்கள்
சுதந்திர இந்தியாவில் இதுவரை இருந்த 12 ஜனாதிபதிகளில், 3 பேர் இஸ்லாமியர்கள் தான். அவர்கள் ஜாகிர் ஹுசைன், பக்ருதின் அலி அகமது மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஆகியோர் ஆவர்.
iranuvam

ராணுவத்தில்…
இந்திய ராணுவத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை விட, பல இஸ்லாமிய ராணுவ வீரர்கள் தான் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்து, கேலன்டிரி விருதுகளையும், உயர் பதவிகளையும் பெற்றுள்ளனர்.
அதில் இந்திய விமானப்படையை தலைமை தாங்கிய முதல் இஸ்லாமியர் இட்ரிஸ் ஹசன் லத்தீப் என்பவராவார். இவர் 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரின் போது துணை பணியாளராக இருந்தார்.
பின் அவரது சிறப்பான சேவையால் 1973 முதல் 1976 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையின் விமானப் பணியாளராக இருந்தார்.
09-1449645584-7-ashura1
மற்ற நாடுகளை விட அதிகம்
உலகிலேயே மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு கூறுகிறது.

09-1449645591-8-islam1

இந்தியாவினுள்…
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், அஸ்ஸாம் மக்கள் தொகையில் 34% இஸ்லாமியரும், லட்சத்தீவுகளில் 96% இஸ்லாமியரும், கேரளத்தில் 26% இஸ்லாமியரும் உள்ளனர்.

09-1449645597-9-famous-mosques

பள்ளிவாசல்
இந்தியாவில் 300,000 பள்ளிவாசல்கள் உள்ளன. சொல்லப்போனால் பாகிஸ்தானை விட இரண்டு மடங்கு அதிகமாக இந்தியாவில் உள்ளது எனலாம். மேலும் அரபு நாடுகளில் 1418 பள்ளிவாசல்களும், பங்களாதேசத்தில் 6,000 பள்ளிவாசல்களும் உள்ளன.

Share.
Leave A Reply