கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயொருவரும் ,அவரது மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

பன்னல – ஹாவானெலிய பிரதேசத்தில் 20 வயதான மகளும் , அவரது தாயுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.

தற்கொலைக்கு காரணம் இளம் பெண்ணின் காதல் தொடர்பொன்றின் விளைவே என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரின் காதலன் வீட்டுக்கு வந்து தொடர்ந்து சண்டையிட்டமை போன்ற பல காரணங்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் அவ் யுவதிக்கு வேறொரு காதலனும் இருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்காதலனுடனான தொடர்பு முறிவடைந்த பின்னரே அவருக்கு புதிய காதல் தொடர்பு ஏற்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.

இறப்பதற்கு முன்னர் அவ்யுவதி பல கடிதங்களை எழுதி வைத்துள்ளதுடன் அவற்றில் இவை தொடர்பாக குறிப்பிட்டுமுள்ளார்.

மேலும் இறப்பதற்கு முன்னர் பழைய காதலனின் வங்கிக் கணக்குல் 1 இலட்சம் ரூபா பணம் வைப்பும் செய்துள்ளார்.

இதுதவிர நகைகளை எடுத்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். மேலும் தனக்கு புதிய காதலனுக்கு தொல்லைகள் எதுவும் கொடுக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

பழைய காதலன் , குறித்த பெண்ணின் இரத்த உறவினர் என்பதாலேயே வீட்டார் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் அப்பெண் புதிய காதலனொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட போதிலும் , பழைய காதலன் தன்னை திருமணம் செய்யும் படி தொல்லை செய்துள்ளார்.

இதனைத்தாங்கிக்கொள்ள முடியாமலேயே தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply