சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரத்துக்கு அடிமையாகும் அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பொறுப்பேற்கவுள்ள தூதுவர் தோமஸ் சானொன் இன்று காலை உணவாக அப்பத்தை சாப்பிட்டார்.

கிழக்கிற்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர் அவருக்கு காலை உணவாக அப்பம் பரிமாறப்பட்டது.

இதுபற்றி அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தனது ருவிட்டர் பக்கத்தில் சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

thomas-shannon-hopper

ஏற்கனவே சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான நிஷா பிஸ்வால், சமந்தா பவர் ஆகியோரும் சிறிலங்காவின் அப்பத்தைச் சுவைத்திருந்தனர்

இது அப்பம் இராஜதந்திரம் என்று இராஜதந்திர வட்டாரங்களில் பிரபலம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா பவருக்கும் அப்பம் விருந்து – கொழும்பில் தொடர்கிறது ‘அப்பம்’ இராஜதந்திரம்

Share.
Leave A Reply