பெண்களை தான் பொதுவாக ஆண்கள் ஜில்-ஜங்-ஜக் என்று கூறி வகை பிரிப்பதுண்டு. ஆனால், உண்மையில் சைட் அடிப்பதில் இருந்து, நூல் விடுவது, கேலி செய்வது, உதார் விடுவது என ஆண்களை விட காதல் கலாட்டாக்களில் பெண்கள் எப்போதுமே “அதுக்கும் மேல” ரகத்தை சேர்ந்தவர்கள்.
ஆம், ஆண்கள் பெண்களை வகைப்படுத்துவதை போலவே, பெண்களும் காலம் காலமாக ஆண்களை வகைப்படுத்தி தான் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது உண்மை தான். சில பெண்கள் காவிய புதனான அமைதியான ஆண்களையும், சில பெண்கள் அதிரடியான வியாழனான ஆக்ஷன் கிங்குகளையும் விரும்புகிறார்கள்.
அஜித்
ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் டீசன்ட்டான ஆண்கள். அனைவருக்கும் இவர்களை பிடிக்கும், இவரை காதலிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து தரப்பு பெண்களுக்கும் இருக்கும். ஆனால், இவர்களை காதலில் விழ வைப்பது சற்றுக் கடினம். பெரும்பாலும் இவர்கள் அம்மா, அப்பா பேச்சு கேட்பவர்களாக இருப்பார்கள். எது செய்தாலும் அம்மா, அப்பாவின் ஒப்புதலை பெற்று செய்ய வேண்டும் என்ற நினைப்பவர்கள்.
விஜய்
காந்தத்தைப் போல பார்வையில் சுண்டியிழுக்கும் ஆண்கள். பார்க்க சுமாராக இருந்தாலும், இவர்கள் இருக்கும் இடத்தில் இவர் தான் மாஸ் என்பது போல் இருப்பார்கள். இவரது பேச்சை கேட்கவே ஓர் கூட்டம் இருக்கும். இவர் இருக்கும் இடத்தில் நகைச்சுவை பட்டாசு சரவெடியாய் வெடிக்கும். இவர்களை காதலிக்கும் பெண்களை விட, தோழமையாக பழகும் பெண்கள் அதிகமாக இருப்பார்கள்.
தனுஷ்
சுட்டி, குட்டி!! பார்க்க பாகத்து வீட்டு பையன் என்ற பெயரை வைத்துக் கொண்டு, அனைத்துஅலும்புகளும் செய்யும் நபர்கள் இவர்கள். இவனுக்கு எல்லாம் பொண்ணு உசாராகுமா?? என்று சிலர் கிண்டலடிக்கலாம். ஆனால், கடைசியில் இவர்கள் அழகான பெண்களை அசால்ட்டாக கரக்ட் செய்து லவட்டிக் கொண்டு செல்வார்கள்.
சூர்யா
பெண்கள் சுற்றி, சுற்றி காதலிக்கும் ஆண்மகன். பக்கா ஜென்டில்மென், உதவும் குணம் கொண்டவர்கள், காதலித்தால் அதே பெண்ணை தான் கரம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருப்பவர்கள்.
சிம்பு
பிடிக்கும் ஆனா, பிடிக்காது ரகம். சகலகலா வல்லவனாக இருந்தாலும் வாயும், கையும் சும்மா இருக்காது. இதனாலேயே இவர்களுக்கு பெண்கள் கிடைக்காமல் போய்விடுவார்கள். ஆனால் உருகி, உருகி காதலிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள்.
கார்த்தி கிராமத்து
ஆள், வீட்டுக்கு ஏற்ற பிள்ளை. கோபம் வந்தாலும் குணமான ஆண்மகன். நல்லது, கெட்டது என பகுத்தறிந்து நடக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். பெரும்பாலும் இவர்கள் காதலிக்க முயலாமல் இருந்தாலும், அக்மார்க் தங்கமாக இருக்கும் இவர்களை பெண்கள் விடுவதில்லை.
விஷால்
ரோஷம் கொண்ட ஆம்பள….!! கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக திகழ்பவர்கள். ஆனால், உபதேசம் செய்வதை விட அடி, உதை கொடுத்து திருத்தும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களை கண்டால் பெண்களுக்கு காதல் வருவதை விட பயம் தான் வரும். ஆனால், நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் இவர்களது குணம் புரிந்து காதலில் விழுந்துவிடுவார்கள்.