கர்நாடக மாநிலம், சிர்சியில் தனது கன்றுக் குட்டியை மோதுண்டு கொலை செய்த பஸ்சை துரத்தி வழிமறிக்கும் பசு மாட்டின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்கிறது.

தனது கன்றின் பிரிவின் துயரையும், பாசத்தின் வலிமையையும் எடுத்துக்காட்டும் இந்த சம்பவம்.

துரத்துவது ஏன்

அந்த பஸ் வேகமாக வந்ததால்தான் கன்றுக்குட்டியின் மீது மோதி கொன்றுவிட்டதாக கருதி, அந்த பஸ்சை வேகமெடுக்க விடாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது அந்த பசுமாடு.

ஏமாற்ற முடியவில்லை…

பசு மாடு சரியாக பஸ்சை இனம் கண்டு வழிமறிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, அந்த பஸ்சை சில நாட்கள் இயக்காமல், பஸ்சின் வண்ணத்தையே மாற்றியுள்ளனர். ஆனாலும், அந்த பஸ்சை துல்லியமாக அடையாளம் கண்டு மறிக்கிறதாம் இந்த பசுமாடு.

ஆச்சரியம், ஆனால் உண்மை…
அந்த பஸ் கேஏ-31 எஃப்857 என்ற பதிவெண் கொண்டது. அதனை அடையாளமாக வைத்து மறிக்கிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. இருப்பினும், அவ்வளவு துல்லியமாக அடையாளம் காணுமோ என்ற எண்ணமும் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பாச வெறி…
அத்தோடு, தனது கன்றுக்குட்டியை கொன்ற முன்சக்கரத்தின் டயரை கொம்பாலும் குத்திக் கிழிக்க முயற்சிக்கிறதாம் அந்த பசுமாடு.

அசையாத பசு…
கன்றுக்குட்டியை கொன்ற இடத்தை விட்டு, அசையாமல் அதே இடத்தை சுற்றி வருகிறதாம் இந்த பசு மாடு. தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ் ஓட்டுனரிடம் நீதி கேட்பது போலே இந்த சம்பவம் இருக்கிறது.

Share.
Leave A Reply