சென்னை: சென்னையை உருக்குலைத்த வானத்து சுனாமி போன்ற கன மழையை அனைவரும் கரித்துக் கொட்டிக்கொண்டுள்ளோம். இந்த நிலையில், மழை தன்மீது தப்பில்லை என்று பராசக்தி பட கிளைமேக்ஸ் சிவாஜி கணேசன் போல வசனம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை பதிவு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

“சிங்காரச்சென்னை.. விசித்திரம் நிறைந்த பல மழைகளை சந்தித்துள்ளது, புதுமையான பல வெள்ளங்களை கண்டுள்ளது.. ஆகவே நான் புதுமையான மழையும் அல்ல, அடித்து வெளுக்கும் நான் அசாதாரண மழையும் அல்ல.

கனமழை பொழிந்தேன், வெள்ளத்தை விளைவித்தேன் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது என் மீது,.. ஏரிகள் குளங்களை யுனிவர்சிட்டிகளாக்கியது யார் குற்றம்?” என்றபடி நீள்கிறது அந்த வீடியோ டயலாக். துன்பத்திலும் சிலர் இப்படி மீம்ஸ் உருவாக்கி இன்பம் அடைகிறார்கள் போலும்.

Share.
Leave A Reply