சிம்லா: பிரதமர் மோடிக்கு எதிராக சிம்லாவில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் உருவப்பொம்மையை எரிக்க சிலர் முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில் 2 பேர் கருகினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சிம்லாவில் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் சுங்விந்தர்சிங் தலைமையில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர். பிறகு மோடியின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர்.

அப்போது பெட்ரோல் சிதறியதால் தீ நாலாபுறமும் பரவி, காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரசார் அலறியபடி ஓட்டம் பிடித்தனர். இதில் 2 காங்கிரஸ்காரர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உடலின் சில பகுதிகள் கருகியதால் வலி தாங்காமல் அவர்கள் ஓலமிட்டனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிம்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தால் சிம்லாவில் பரபரப்பு ஏற்பட்டது.


‘உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்…!’ – வாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை!-வீடியோ

jeyaa

சென்னை: ” உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்…!” என அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் தமிழக மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார்.

அதில், ”கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதங்களால் நீங்கள் அடைந்த துயரத்தை நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன்.

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கு சுயநலம் கிடையாது. என்னை நீங்கள் ‘அம்மா’ என்று அழைக்கும் ஒரு சொல்லுக்காக என்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். எத்துயர் வரினும் இந்த தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

அவரது முழு பேச்சை கேட்க…

Share.
Leave A Reply