சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுவர்கள் தங்களது தாயை பார்க்க வேண்டும் என்று கதறியவாறு ஓடிவரும் வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அவர்களுடன் சேர்ந்து சிரிய ராணுவத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள டவ்மா(Doama) பகுதியில் சிரிய படையினர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 49 பேர் பலியாகினர். மேலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இருந்து தப்பிய சிறுவர்கள் இருவர் தங்களின் தாயை பார்க்கவேண்டும் என்று கதறி அழுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் பதவேற்றப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு காரணமாக முழுவதும் சிதிலமடைந்த கட்டிடத்தில் இருந்து சிறுவன் ஒருவர் அம்மா என்று கதறியவாறே ஓடி வருகிறான்.
அவனை சிரிய உள்நாட்டு பாதுகாப்பு தன்னார்வலர் ஒருவர் பத்திரமாக அருகில் உள்ள வாகனத்துக்கு அழைத்து செல்கிறார்.
பின்னர் மற்றொரு சிறுவன், ‘ எனக்கு என் அம்மா வேண்டும்’ என்று ஓலமிட்டவாறு ஓடி வந்து வேனில் ஏறுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சிரிய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு சார்பில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுவரும் நிலையில் இந்த வீடியோ பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மனிதவுரிமைகளை பற்றி பேசும் நாடுகள் தான் முன்னணியில் நின்று சிரியா மீது வீமானம் மூலம் குண்டுபோடுகிறார்கள். அதே நேரம் கப்பல்கலிருந்தும் ஏவுகனைகளை ஏவுகின்றார்கள்.
இவர்கள் போடும் குண்டுகளும், ஏவகனைகளும் ஜ.எஸ்.எஸ் காரர்களின் தலைகளை குறிபார்த்து தானே வீழ்கிறது?
ஆயுதம் தயாரிக்கும் எல்லா வல்லரசு நாடுகளுமே தாங்கள் தயாரித்த ஆயுதங்களையும் விற்பனை செய்யவும், முன்னோட்ட சோதனைகாக பயன்படுத்திப்பார்க்கும் ஒரே நாடாக இன்று சிரியா காணப்படுகின்றது.
மேற்குலகமும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்தும் போர்கள் மனித இன அழிப்பு இல்லையா??