தாய்லாந்து மன்னரின் நாயை இணையத்தளத்தில் விமர்சித்ததற்காக அந்நாட்டு பிரஜை ஒருவர் 37 வருட சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கின்றார்.

மன்னரின் நாய் குறித்து கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டு தொழிலாளி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்படவுள்ளது.

அவரின் இந்த பதிவிற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர் எவ்வாறான பதிவு ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவலை வெளியிட அந்நாட்டு இராணும் மறுத்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார்.

அங்கு மன்னர் அல்ல அரச குடும்ப உறுப்பினர்கள் எவரையாவது விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் உள்ளது.

இவ்வாறு அரச குடும்பத்தினரை விமர்சிப்பவர்களுக்கு குறைந்தது 15 வருட சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

Share.
Leave A Reply