சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் இதுவரை 16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக அவருக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் சவூதி அரேபிய ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த முஹம்மது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.

இவர் தனது 14 வது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் 2 வருடம் கழித்து முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு ஆரம்பித்த இவரின் தொடர் திருமணங்கள் 16 வரை நீடித்துள்ளது.

ஒரே காலத்தில் இவர் 4 பெண்களை மட்டுமே மணமுடித்துள்ளார்.

அந்த மனைவிமார்களில் எவரேனும் இறந்து அல்லது விவாகரத்து பெற்றதன் பின்னரே மற்றைய மனைவிமார்களை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு இவரின் 16 மனைவிகளுக்கும் பிறந்த 21 மகன்கள் மற்றும் 16 மகள்கள் உள்ளதுடன் 50 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சேர்த்து வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply