இத்தாலியில் மீனவர் ஒருவரது தூண்டிலில் அதிசய மீன் ஒன்று மாட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் Reggio Nell Emilia எனும் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான யூரி, இவர் போ நதியில் தூண்டில் முறையில் மீன் பிடித்து வந்துள்ளார்.

big_catfish_006
சம்பவத்தன்று வழமையாக மீன் பிடிக்க தூண்டில் வீசி காத்திருந்த மீனவர் யூரிக்கு வியப்பூட்டும் நிகழ்வு ஒன்று காத்திருந்தது.

திடீரென்று யூரியின் தூண்டில் கனத்த பொருள் ஒன்றில் சிக்கியது போன்று உணர்ந்த அவர் தமது சக்தி முழுவதும் திரட்டி இழுக்க முயன்றுள்ளார்.

big_catfish_002ஆனால் அந்த பொருள் ஆற்றின் உள்ளே அதிக வலிமையுடன் இழுக்கவும், இவர் துணிவுடன் மீண்டும் தமது படகு நோக்கி இழுத்துள்ளார்.

big_catfish_007இறுதியில் தமது தூண்டிலில் சிக்கியுள்ளது பிரம்மாண்ட கெளுத்தி மீன் என்பதை தெரிந்துகொண்ட யூரி பல மணி நேர போராட்டத்தின் முடிவில் அதை கரை சேர்த்துள்ளார்.

big_catfish_003கடந்த 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் யூரி தமது வாழ்நாளில் இதுவரை இதுபோன்ற பிரம்மாண்ட மீனை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.

big_catfish_004தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத அந்த பிரம்மாண்ட மீனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள யூரி, இச்சம்பவம் தமக்கு மறக்கமுடியாத அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.

big_catfish_005

Share.
Leave A Reply