கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக பயணித்த முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக வீதியைக் கடந்த முதியவர் ஒருவரை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த புகையிரதம் மோதியதில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச்சம்பவத்தின் போது, 355, உதயநகர் கிழக்கு, உதயநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி எனும் வயது 73 வயது முதியவரே உயிரிழந்துள்ளார்.