இசைக் கச்சேரிக்காக கனடா சென்றுள்ள அனிருத், கச்சேரி முடிந்து நாளை சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீப் பாட்டு என்ற பெயரில் சிம்புவுடன் இணைந்து ஆபாசப் பாடல் உருவாக்கியதற்காக கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் அனிருத்.

சிம்புவையும் அனிருத்தையும் கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இருவரும் விசாரணைக்கு வரும் டிசம்பர் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கனடாவில் இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள அனிருத், கச்சேரியை நேற்று முடித்துவிட்டார்.
நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
canediya
அனிருத்  கைதுசெய்யப்பட்டால் ..கனேடிய தமிழ் யுவதிகள் கண்ணீர்விட்டு அழப்போகிறார்களே!

பீப் பாடல் – கனடாவில் பல கோடி கொடுத்து கூத்து! (Video)


இப்போது எல்லோராலும் பேசப்படும் பாடல் ‘பீப் பாடல்’. இதற்கு கனடாவில் பல கோடி கொடுத்து கூத்தடிக்கும் சிலரின் அதிர்ச்சி வீடியோ இது…

Share.
Leave A Reply