வெளிநாட்டு பயணத்தின் பின் நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவிருந்த  முக்கியஸ்தர்களுக்கானவழியில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானநிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரின் காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லி மீற்றர் பிஸ்டலொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்திக்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் அக்காலப்பகுதியிலேயே இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் நபரொருவர் துப்பாக்கியுடன் இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த நபர் , பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவரை விடுவிக்குமாறும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அழுத்தம் பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி வரும் வேளையில் ஆயுத த்துடன் நபரொருவர் இருந்தமை, சாதாரண விடயமல்லவெனக் கூறி விமானநிலைய பாதுகாப்பு பிரிவினர் அதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply